தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021

 தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021 



தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021 அன்று மாலை நடைபெற்றது.  கூட்டத்தில் திரு. இரா. புருசோத்தமன்,  திரு. க. ரணதிவே, திரு. எஸ்ஏ. முத்துபாரதி, திரு.  ப . கண்ணன், திரு. க. சுரேஷ்குமார், திரு.  வெ. முனியாண்டி, திரு. சே. பாலசுப்பிரமணியன்  ஆகியோர் கலந்து கொண்டனா்.வரவேற்புரை,  சுயஅறிமுகம் முடிந்தபின்  பங்கேற்றவர்களின் கருத்துகள் பெறப்பட்டது.  

திருப்பூர் அமைப்பின் நிா்வாகிகள் சீரமைப்பு செய்வதின் அவசியம் குறித்து வலியுறுத்தினா்.  அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு  கீழ்கண்ட நிர்வாக சீரமைப்பினை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனா்.

தலைவா்.   திரு. எஸ்ஏ. முத்துபாரதி

துணைத்தலைவா்...திரு. ருத்ரமூா்த்தி

துணைத்தலைவா்...திரு. சரவணன்

கௌரவத்தலைவா் ..திரு. பாலசுப்பிரமணியம்

செயலா் .  திரு. க. ரணதிவே

துணைச் செயலா்....திரு.  ப. கண்ணன்

துணைச் செயலா்...திரு. ராஜேஷ்

பொருளாளா்...திரு, க. சுரேஷ்குமார்

ஒருங்கிணைப்பாளா்...திரு. இரா. புருசோத்தமன்

இணை ஒருங்கிணைப்பாளா்...திரு, தங்கவேல்

மாவட்ட செய்தித் தொடா்பாளா்..திரு. வெ. முனியாண்டி


மேற்கண்ட தீா்மானங்களின் விவரங்களை மாநில தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று பின்னர் குழுவில் அறிவிப்பது என்றும்,

முறையாக பத்திரிக்கை செய்தி தருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் அமைப்பின் உறுப்பினா் சேர்க்கை குறித்தும், இனிவரும் காலங்களில் எப்படியான செயல்பாடுகள் செய்வது எனவும் கருத்துகள் பெறப்பட்டன.  

வார இறுதியில் நிர்வாகிகள் சந்திப்பு என்றும், மாதம் ஒருமுறை அனைத்து உறுப்பினர் அந்தந்த மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியின் அடிப்படையில் கூடுவது என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.

தொடா்ந்து அமைப்பினை சிறப்பாக கொண்டு சென்று மாவட்டத்தில் தமிழ் சார்ந்தும், தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு தமிழ்ச்சங்க திருப்பூா் மாவட்டம் சிறப்பாக செயல்படவும் உறுதி ஏற்கப்பட்டது.

நன்றி அறிவிப்பிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.




Comments

Popular posts from this blog

தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் திருப்பூர் மாவட்ட அறிமுக இணைய வழி கூட்டம்